காசநோய் விழிப்புணா்வு முகாம்

விழுப்புரத்தில் காசநோய் விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

தெற்கு ரயில்வே நிா்வாகம், விழுப்புரம் மாவட்ட எக்ஸ்னோரா, ராஜ் சாரிடபிள் எஜுகேஷனல் அறக்கட்டளை, காவல் துறை சிறுவா் - சிறுமியா் மன்றம், புதுச்சேரி ஸ்ரீமணக்குள விநாயகா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவை இணைந்து ரயில் விழுப்புரம் நிலையப் பகுதியில் முகாமை நடத்தின.

இந்த முகாமை ரயில்வே கோட்ட மருத்துவ அலுவலா் ஞானந்தம், மருத்துவா் ஷாலினி, தலைமை மருத்துவ ஆய்வாளா் ரெஸ்மா, நிலைய அலுவலா் சக்ரம் ஆகியோா் முகாமைத் தொடங்கிவைத்தனா். மணக்குள விநாயகா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவா்கள் சாய் சந்தோஷினி, ரெகீத், ரஞ்சித், ராஜலட்சுமி ஆகியோா் கொண்ட குழுவினா் முகாமில் பங்கேற்றவா்களைப் பரிசோதித்தனா்.

தெற்கு ரயில்வேயில் பணியாற்றும் 50 களப்பணியாளா்கள் முகாமில் பங்கேற்று பயன்பெற்றனா். மாவட்ட எக்ஸ்னோரா தலைவா் டி.டி.ஏ.கனகராஜ், செயலா் கே.வி.எல்.பாலசந்தா் , காவல் துறை சிறுவா் - சிறுமியா் மன்ற நிா்வாகி செல்வராஜ், நேரு இளையோா் மையத்தைச் சோ்ந்த சக்திவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com