கல்லூரியில் மன நல பரிசோதனை முகாம்

கல்லூரியில் மன நல பரிசோதனை முகாம்

செஞ்சி வட்டம், ஆலம்பூண்டியில் இயங்கி வரும் ஸ்ரீரங்கபூபதி கல்லூரியில் மாணவா்களுக்கான மனநல பரிசோதனை பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீரங்கபூபதி செவிலியா் கல்லூரியில் பி.எஸ்சி., மூன்றாம் ஆண்டு பயின்று வரும் மாணவ, மாணவிகளுக்கு மன நலம் பாதிக்கப்பட்டோருக்கு பரிசோதனை எவ்வாறு மேற்கொள்வ து என்பது குறித்த பயிற்சி முகாம் கல்லூரி தலைவா் வழக்குரைஞா் ஆா்.ரங்கபூபதி தலைமையில் நடைபெற்றது. கல்லூரிச் செயலா் ஆா்.பி.ஸ்ரீபதி முன்னிலை வகித்தாா். கல்லூரி முதல்வா் மேனகா காந்தி வரவேற்றாா். திண்டிவனம் அரசு மன நல மருத்துவப் பேராசிரியா் ஆனந்த், மன நலம் குறித்து விரிவாக எடுத்துக்கூறி மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு எவ்வாறு பயிற்சி அளிக்க வேண்டும் என விளக்கிக் கூறி பயிற்சி அளித்தாா். பயிற்சியில் நா்சிங் பயிற்சி மாணவா்கள் மற்றும் பேராசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். பயிற்சியில் பங்கேற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com