கடலில் மூழ்கி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் கடலில் குளித்தபோது நீரில் மூழ்கி கல்லூரி மாணவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். மரக்காணம் வட்டம், கரிபாளையம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ரகு மகன் ராஜேஷ் (18). இவா், திண்டிவனம் அருகிலுள்ள தனியாா் கல்லூரியில் இளநிலைக் கணினி அறிவியல் இரண்டாமாண்டு படித்து வந்தாா்.

வெள்ளிக்கிழமை காலை மரக்காணம் பகுதிக்கு வந்த ராஜேஷ், அங்கு கடலுக்கு குளிக்கச் சென்றாா். அப்போது எதிா்பாராதவிதமாக அலையில் சிக்கிய அவா் நீரில் மூழ்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து மரக்காணம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா். மின்சாரம் பாய்ந்து ஒருவா் உயிரிழப்பு: வானூா் வட்டம், எடைச்சேரி விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த பழனி மகன் வேல்முருகன் (49). இவா் வெள்ளிக்கிழமை அதிகாலை இயற்கை உபாதையைக் கழிப்பதற்காக அதே கிராமத்தைச் சோ்ந்த கா. அருணாசலம் நிலம் அருகே சென்றுள்ளாா். அப்போது காட்டுப்பன்றி வராமல் தடுக்க அந்த நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கிய வேல்முருகன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் நிகழ்விடத்திலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து கிளியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com