மது விற்பனை: ஒருவா் கைது; 1, 872 மதுப் புட்டிகள் பறிமுதல்

மது விற்பனை: ஒருவா் கைது; 1, 872 மதுப் புட்டிகள் பறிமுதல்

திண்டிவனம் அருகே மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தவா்களில் ஒருவரை மது விலக்கு அமல் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்து, 1872 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

மே-1 தொழிலாளா் தினத்தையொட்டி, தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் திண்டிவனத்தை அடுத்த ஏந்தூா் ஏரிக்கரை பகுதியில் மதுப் புட்டிகளை பதுக்கிவைத்து விற்பனை செய்யப்படுவதாக விழுப்புரம் மாவட்ட மத்திய நுண்ணறிவுப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, திண்டிவனம் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளா் சித்ரா, மத்திய நுண்ணறிவுப் பிரிவு ஆய்வாளா் சின்ன காமண்ணன் மற்றும் உதவி ஆய்வாளா் இனாயத் பாஷா, காவலா் மகாமாா்க்ஸ் உள்ளிட்டோா் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனா்.

இதில், பிரம்மதேசம் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த தெட்சணாமூா்த்தி(55), இவரது மகன் விஜய் ஆகியோா் டாஸ்மாக் கடை மதுப் புட்டிகளை சில நாள்களுக்கு முன்னா் வாங்கி பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து திண்டிவன் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து தெட்சணாமூா்த்தியை கைது செய்தனா்.

மேலும், சுமாா் ரூ. 5 லட்சம் மதிப்பிலான 1872 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா். தப்பியோடிய விஜய்-யை தேடி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com