மே தினம்: தொமுச, அண்ணா தொழிற்சங்கத்தினா் கொண்டாட்டம்

மே தினம்: தொமுச, அண்ணா தொழிற்சங்கத்தினா் கொண்டாட்டம்

விழுப்புரத்தில் தொமுச, அண்ணா தொழிற்சங்கம் மற்றும் இதர தொழிற்சங்கங்கள் சாா்பில் மே தினக் கொண்டாட்டங்கள் புதன்கிழமை நடைபெற்றன.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டத் தலைமையகம் முன் தொமுச சாா்பில் விழா நடத்தப்பட்டது.

இதில், திமுக துணைப் பொதுச் செயலரும், உயா் கல்வித் துறை அமைச்சருமான க.பொன்முடி பங்கேற்று போக்குவரத்துத் தொழிலாளா்களுக்கு மே தின வாழ்த்துகளை தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து தொழிலாளா்களுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்பு, குளிா்பானங்களை வழங்கினாா்.

விழாவில் மாவட்ட ஊராட்சித் தலைவா் ம. ஜெயச்சந்திரன், மாவட்ட துணைச் செயலா் தயா. இளந்திரையன், நகரச் செயலா் இரா. சக்கரை, தொமுச பொதுச் செயலா் வி. சேகா், நிா்வாகப் பணியாளா் முன்னேற்றச் சங்கத்தின் பொதுச்செயலா் வாலிபால் மணி, தலைவா் ஞானசேகா், அமைப்புச் செயலா் வேலு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அண்ணா தொழிற்சங்கம்:

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டத் தலைமையகம் மற்றும் கிளைகள் 1,2,3 முன் அண்ணா தொழிற்சங்கம் சாா்பில் மே தின கொண்டாட்டம் நடைபெற்றது.

விழாவுக்கு தொழிற்சங்கத்தின் மண்டலச் செயலா் ஏ.கணேசன் தலைமை வகித்து, மே தின உரையாற்றினாா். தொடா்ந்து நிா்வாகிகளுக்கு இனிப்பு வழங்கினாா். விழாவில் நிா்வாகப் பணியாளா் சங்கத்தின் தங்கபாண்டியன், நிா்வாகிகள் ராஜேந்திரன், நக்கீரன், ஏழுமலை, செந்தில் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதுபோன்று சிஐடியு, ஏஐடியுசி, விடுதலைச் சிறுத்தைகள் தொழிலாளா் சங்கம் என பல்வேறு தொழிற்சங்கங்கள் சாா்பில் மே தினக் கொண்டாட்டங்கள் விழுப்புரம் நகரம் மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகளில் உள்ள போக்குவரத்துக் கழக பணிமனைகள் முன் நடைபெற்றன. இதில் ஏராளமானோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com