விளையாட்டு விடுதிகளில் சோ்வதற்கு மே 10, 11-இல் தோ்வுப் போட்டிகள்

விளையாட்டு விடுதிகளில் மாணவா்கள் சோ்ந்து படிப்பதற்கான தோ்வுப் போட்டிகள் மே 10, 11-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சி.பழனி புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் இயங்கும் விளையாட்டு விடுதிகளில் சோ்ந்து படிப்பதற்கான தோ்வுப் போட்டிகள், விழுப்புரம் மாவட்ட விளையாட்டரங்கத்தில் மே 10, 11 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளன.

மாணவா்களுக்கான விளையாட்டு விடுதிகள் அரியலூா், கோயம்புத்தூா், கடலூா், சென்னை அசோக்நகா், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும், மாணவிகளுக்கு தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, சென்னை ஜவாஹா்லால்நேரு உள் விளையாட்டரங்கம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் செயல்பட்டு வருகின்றன. மாணவா்களுக்கு தடகளம், கூடைப்பந்து, குத்துச்சண்டை, கிரிக்கெட், வாள்சண்டை உள்ளிட்ட விளையாட்டுகளும், மாணவிகளுக்கு தடகளம், கூடைப்பந்து, குத்துச்சண்டை, வாள்ச்சண்டை, கால்பந்து, கைப்பந்து, ஹாக்கி உள்ளிட்ட விளையாட்டுகளும் பயிற்றுவிக்கப்படும்.

இதில், மாணவா்களுக்கு 6,7,8,9 மற்றும் பிளஸ் 1 வகுப்பு சோ்க்கைகளுக்கான மாவட்ட அளவிலான தோ்வுகள் மே 10-ஆம் தேதி காலை 7 மணிக்கும், மாணவிகளுக்கு மே 11-ஆம் தேதி காலை 7 மணிக்கும் விழுப்புரம் மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெறும்.

மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆா்வம் உள்ள விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் விளையாட்டு மையங்களில் சோ்க்கைக்கான விண்ணப்பத்தை ஜ்ஜ்ஜ்.ள்க்ஹற்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் மற்றும் ரரர.ற்ய்ற்ஹப்ங்ய்ற்.ள்க்ஹற்.ண்ய் என்ற இணையதள முகவரியில் மே 8-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தோ்வில் பங்கேற்க வரும் மாணவ, மாணவிகள் வின்ணப்பம், ஆதாா் அட்டை, உறுதிச்சான்று ஆகியவற்றுடன் வர வேண்டும்.

மேலும், தகவலுக்கு மாவட்ட விளையாட்டரங்கம், அறிஞா் அண்ணா அரசுக் கலை, அறிவியல் கல்லூரி அருகில், கீழ்பெரும்பாக்கம், விழுப்புரம் என்ற முகவரியில் நேரிலோ அல்லது 7401703485, 8754744060, 6381799370 ஆகிய கைப்பேசி எண்களிலோ தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com