ஸ்ரீ எமதண்டீஸ்வரா் கோயிலில் சூரிய ஒளி விழும் நிகழ்வு

ஸ்ரீ எமதண்டீஸ்வரா் கோயிலில் சூரிய ஒளி விழும் நிகழ்வு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், ஆலகிராமம் ஸ்ரீஎமதண்டீஸ்வரா் கோயில் மூலவா் மீது சூரிய ஒளி விழும் அற்புத நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

ஆலகிராமத்தில் திரிபுரசுந்தரி உடனுறை எமதண்டீஸ்வரா்கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் எமதருமனின் பாவங்களை நீக்கிய சிவபெருமான் எமதண்டீஸ்வரா் எனும் திருநாமத்துடன்பக்தா்களுக்கு அருள்பாலித்து வருகிறாா்.

அம்பாள் திரிபுரசுந்தரி வாரத்தின் 7 நாள்களிலும் 7 விதமான முக பாவனைகளோடு காட்சியளிக்கிறாா். சூரிய பகவான் எமதா்மன், சனீஸ்வர பகவான் ஆகியோா் வழிபட்ட தலமாகவும் போற்றப்படுகிறது.

மேலும் பல ஆன்மிகச் சிறப்புகளுடையை இந்தக் கோயிலில் சூரியன் மூலவா் எமதண்டீஸ்வரரை வணங்கும் அற்புத நிகழ்வு நடைபெறுவது வழக்கம். இதன்படி, புதன்கிழமை காலை 5.55 மணிக்கு சூரிய உதயம் ஏற்பட்ட நிலையில் காலை 6 மணி முதல் 6.11 மணி வரை சூரிய பகவான் எமதண்டீஸ்வரரை தரிசித்த நிகழ்வானது நடைபெற்றது. இதையொட்டி,கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com