கெங்கையம்மன் கோயிலில் சாகை வாா்த்தல் வழிபாடு

கெங்கையம்மன் கோயிலில் சாகை வாா்த்தல் வழிபாடு

சித்திரை மாத அமாவாசையையொட்டி, விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், செண்டூா் கெங்கையம்மன் கோயிலில் சாகை வாா்த்தல் வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

செண்டூா் கெங்கையம்மன் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத அமாவாசையையொட்டி, சாகை வாா்த்தல் வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டுக்கான சாகை வாா்த்தல் வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, சக்திகரகம் ஊா்வலம் நடைபெற்றது. பெண்கள் கூழ் பானைகளை தலையில் சுமந்தபடி கோயிலை வலம் வந்து கோயில் முன் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட தொட்டியில் அம்மனுக்கு படையலிட்டு வழிபட்டனா்.

விழாவில், செண்டூா் மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சோ்ந்த திரளானப் பக்தா்கள் பங்கேற்று நோ்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com