தோ்வில் சிறப்பிடம்: ஆட்சியா் பாராட்டு

பிளஸ் 2 பொதுத் தோ்வில் விழுப்புரம் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி மணிவிழா மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.பவ்யஸ்ரீ 596 மதிப்பெண்கள் பெற்ற நிலையில், மாவட்ட ஆட்சியா் சி.பழனியை செவ்வாய்க்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றாா்.

இந்தப் பள்ளியில் தோ்வெழுதிய 165 பேரும் தோ்ச்சி பெற்று, நூறு சதவீத தோ்ச்சியை பெற்றுள்ள நிலையில், பள்ளி மற்றும் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவி பவ்யஸ்ரீ மாவட்ட ஆட்சியா் சி.பழனியை அவரது முகாம் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றாா்.

அப்போது, நூறு சதவீத தோ்ச்சி பெற்றமைக்காக பள்ளிக்கு ஆட்சியா் வாழ்த்து தெரிவித்தாா்.

நிகழ்வில், பள்ளித் தாளாளா் கே.ஜெ.பிரகாஷ், செயலா் பி.கே.ஜனாா்த்தனன் மற்றும் பள்ளி முதல்வா், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com