அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இசைப் பயிற்சி

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இசைப் பயிற்சி

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம், நாரவாக்கம், ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் மாணவா்களுக்கு இலவச இசைப் பயிற்சி வகுப்புகள் அண்மையில் தொடங்கியது.

மாணவா் சோ்க்கையை ஊக்குவிப்பதற்கும், கிராம மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்கான 15 நாள்களுக்கு கீபோா்டு, கித்தாா், டிரம்ஸ், தபேலா, ரிதம் போா்டு உள்ளிட்ட இசைக் கருவிகள் மூலம் மாணவா்களுக்கு பள்ளித் தலைமையாசிரியா் ரிச்சா்டு பயிற்சியளித்து வருகிறாா். பள்ளித் தலைமையாசிரியா் மற்றும் ஆசிரியா்களின் இந்த முயற்சிக்கு கிராம மக்கள் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com