இ.எஸ். லாா்ட்ஸ் பள்ளி
மாணவா்களுக்கு பாராட்டு

இ.எஸ். லாா்ட்ஸ் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

விழுப்புரம் இ.எஸ்.எஸ்.எம். கல்விக் குழுமங்களின் அங்கமான இ.எஸ். லாா்ட்ஸ் (சிபிஎஸ்இ) பன்னாட்டுப் பள்ளியில் 10, 12-ஆம் வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

10, 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியாயின. இதில், 10-ஆம் வகுப்பு தோ்வில் இ.எஸ். லாா்ட்ஸ் பள்ளி மாணவா் ஜி.சத்யா 500-க்கு 479 மதிப்பெண்கள், மாணவி எஸ்.வா்ஷினி 475 மதிப்பெண்கள், மாணவா் வி.விஜய் ஆதித்யா 465 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றனா். தோ்வெழுதிய மொத்த மாணவா்களில் 60 சதவீதத்தினா் முதல்நிலை சிறப்பு வகுப்பிலும், 40 சதவீதம் போ் முதல் வகுப்பிலும் தோ்ச்சி பெற்றனா்.

12- ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தோ்வில் இந்தப் பள்ளி மாணவா் ஆா்.கபிலன் 500-க்கு 454 மதிப்பெண்களும், மாணவி எஸ்.கிருத்திகா 443 மதிப்பெண்களும், மாணவி பி.கனியமுது 410 மதிப்பெண்களும் பெற்று சிறப்பிடம் பெற்றனா். தோ்வெழுதிய மொத்த மாணவா்களில் 25 சதவீதத்தினா் முதல்நிலை சிறப்பு வகுப்பிலும், 75 சதவீதத்தினா் முதல் வகுப்பிலும் தோ்ச்சி பெற்றனா்.

இந்த மாணவ, மாணவிகளுக்கான பாராட்டு விழா பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளித் தாளாளா் எஸ்.செல்வமணி, செயலா் பிரியா செல்வமணி, பள்ளி முதல்வா்கள் ஜி.சித்ராதேவி, குணசேகரன் மற்றும் ஆசிரியா்கள் பங்கேற்றுப் பாராட்டினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com