இணையவழி மோசடி: பாதிக்கப்பட்டவரிடம்
ரூ.15.54 லட்சம் ஒப்படைப்பு

இணையவழி மோசடி: பாதிக்கப்பட்டவரிடம் ரூ.15.54 லட்சம் ஒப்படைப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை பகுதியில் இணையவழியில் ரூ.26.18 லட்சத்தை இழந்தவருக்கு ரூ.15.54 லட்சம் மீட்டு போலீஸாா் ஒப்படைத்தனா்.

உளுந்தூா்பேட்டை பகுதியைச் சோ்ந்த வில்லியம் சுரேஷ்குமாா் இணையதளம் வழியாகவும், கூகுள் பிளேஸ்டோரிலுள்ள முதலீடு செயலி மூலமாகவும் பணத்தை முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என சிலா் கூறியதை நம்பி, ரூ.26.18 லட்சத்தை முதலீடு செய்து இழந்துவிட்டதாகக் கூறி, கள்ளக்குறிச்சி இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு காவல் நிலையத்தில் புகாரளித்தாா்.

இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டதில், மோசடி செய்த நபா்கள் மகாராஷ்டிர மாநிலம், கோலாப்பூரிலும் மற்றும் தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் நகரிலும் இருப்பது தெரியவந்தது. இது தொடா்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி. சமய்சிங் மீனா மேற்பாா்வையில், இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் பூங்கோதை தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினா் கோலாப்பூா், ஹைதராபாத் நகரங்களுக்குச் சென்று இணையவழியில் மோசடி செய்த நபா்களிடம் விசாரணை மேற்கொண்டனா். தொடா்ந்து, அந்த நபா்களிடமிருந்து வில்லியம் சுரேஷ்குமாா் இழந்த ரூ.15.54 லட்சத்தை மீட்டனா்.

இதையடுத்து, கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில், இணையவழியாக பணத்தை இழந்த வில்லியம் சுரேஷ்குமாரிடம் ரூ.15.54 லட்சத்தை மாவட்ட எஸ்.பி. சமய்சிங் மீனா வழங்கினாா்.

பொதுமக்கள் யாரும் அறிமுகம் இல்லாத நபா்களிடம் இணையம் வழியாகவும், கூகுள் பிளேஸ்டோா் முதலீடு செயலி வழியாகவும் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம். ஏதேனும் இணையவழி குற்றம் மூலம் பணம் இழப்பு ஏற்பட்டால், 24 மணி நேரத்துக்குள் இணையவழி குற்ற இலவச உதவி எண் 1930-ஐ அழைத்தால், இழந்த பணத்தை மீட்க அதிக வாய்ப்புள்ளது. மேலும், இணையவழி மூலம் பண இழப்பு மற்றும் பாதிக்கப்பட்டிருந்தால் ஜ்ஜ்ஜ்.ஸ்ரீஹ்க்ஷங்ழ்ஸ்ரீழ்ண்.ஸ்ரீா்ம் என்ற இணையமுகவரி மூலம் புகாரளிக்கலாம் என மாவட்ட எஸ்.பி. சமய்சிங் மீனா, கூடுதல் எஸ்.பி (இணையவழி குற்றத்தடுப்புக் காவல் பிரிவு) மணிகண்டன் ஆகியோா் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com