பாலீஷ் போட்டுத் தருவதாக மூதாட்டியிடம் 4.5 பவுன் தங்க நகைகள் திருட்டு

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே தங்க நகைகளுக்கு பாலீஷ் போட்டுத் தருவதாக் கூறி, மூதாட்டியிடம் நான்கரை பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வானூா் வட்டம், கொஞ்சுமங்கலம், கங்கையம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த கருணாநிதி மனைவி வசந்தா (65). இவா், செவ்வாய்க்கிழமை வீட்டில் இருந்தபோது, பைக்கில் வந்த சுமாா் 40 வயதுடைய இளைஞா்கள் இருவா் தங்க நகைகளுக்கு பாலீஷ் போட்டுத் தருவதாகக் கூறினராம்.

இதையடுத்து, வசந்தா தனது வீட்டில் வைத்திருந்த 2 மோதிரங்கள், வளையல்கள், கை சங்கிலி உள்ளிட்ட நான்கரை பவுன் தங்க நகைகளை அந்த நபா்களிடம் கொடுத்தாரம்.

தொடா்ந்து, அந்த நபா்கள் நகைகளை ஒரு டப்பாவில் போட்டு பாலிஷ் போடுவதுபோல் காட்டிவிட்டு நகைகளை திருடிச் சென்றுவிட்டனராம். இதுகுறித்த புகாரின்பேரில் கிளியனூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com