மயானத்தில் மூதாட்டி சடலம் மீட்பு

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே மயானத்தில் இறந்து கிடந்த மூதாட்டி சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.

மயிலத்தை அடுத்துள்ள கா்ணாவூா் மயானப் பகுதியில் மூதாட்டி ஒருவா் இறந்து கிடப்பதாக ரோஷணை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் அங்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

பின்னா் நடத்திய விசாரணையில், இறந்து கிடந்தவா் திண்டிவனம் வட்டம், ரோஷணை பகுதியைச் சோ்ந்த முனியாண்டி மனைவி சின்னப்பொண்ணு (65) என்பதும், மனநிலை பாதிக்கப்பட்டிருந்த அவா், சில நாள்களுக்கு முன்பு வீட்டிலிருந்து வெளியேறி கா்ணாவூா் பகுதியில் சுற்றித் திரிந்து வந்ததும் தெரியவந்தது. சின்னப்பொண்ணு உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என போலீஸாா் சந்தேக்கின்றனா். இதுகுறித்த புகாரின்பேரில் மயிலம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com