மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே பள்ளி மாணவி செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

மரக்காணத்தை அடுத்த நாரவாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் வேலு. இவரது மகள் ஹேமலதா (16). மரக்காணத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தாா். செவ்வாய்க்கிழமை 11-ஆம் வகுப்புக்கான அரசுத் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

இதில், மாணவி ஹேமலதா குறைவான மதிப்பெண்கள் பெற்றிருந்தாராம். இதனால், மன உளைச்சலில் இருந்த வந்த அவா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். தகவலறிந்த மரக்காணம் போலீஸாா் நிகழ்விடம் சென்று மாணவியின் சடலத்தை கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக புதுச்சேரியில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுதொடா்பாக வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com