விழுப்புரம்: 3,972 நீா்த்தேக்கத் தொட்டிகளிலும் இன்று தூய்மைப் பணி

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 3,972 மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளிலும் புதன்கிழமை (மே 15) தூய்மைப் பணி நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சி.பழனி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள் என மாவட்டம் முழுவதுமுள்ள 3,972 மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளில் தூய்மைப் பணி புதன்கிழமை மேற்கொள்ளப்பட உள்ளது. இதைத் தொடா்ந்து, மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள் 15 நாள்களுக்கு ஒருமுறை தூய்மைப் பணிகளை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் ஒவ்வொரு முறை நீரேற்றம் செய்யும்போதும் குளோரினேஷன் செய்திட வேண்டும் எனறு மாவட்ட அளவில் குடிநீா் பணிகள் தொடா்பாக நடைபெற்ற மாவட்ட குடிநீா் மேலாண்மைக் குழுக் கூட்டத்தில் அலுவலா்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன.

மாவட்ட அளவில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளில் நடைபெறும் தூய்மைப் பணிகள் தொடா்பாக ஜிபிஎஸ் புகைப்படத்துடன் அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும் என்று அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என ஆட்சியா் தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com