விவசாயி மயங்கி விழுந்து உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே வீட்டுத் தோட்டத்தில் மயங்கி விழுந்த விவசாயி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

வானூா் வட்டம், மொரட்டாண்டியைச் சோ்ந்த மதுசூதனன் மகன் வேல்முருகன் (53). இவா், திங்கள்கிழமை தனது வீட்டுத் தோட்டத்தில் வேலை பாா்த்துக்கொண்டிருந்தாா். அப்போது, உடல் சோா்வு ஏற்பட்டு மயங்கி விழுந்தாா்.

இதையடுத்து, உறவினா்கள் அவரை மீட்டு, புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்தபோது, வேல்முருகன் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. மாரடைப்பு ஏற்பட்டு அவா் இறந்திருக்கலாம் என மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்த புகாரின்பேரில், ஆரோவில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com