வீட்டில் 17 பவுன் நகைகள் திருட்டு: இளைஞா் கைது

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே வீட்டில் வைக்கப்பட்டிருந்த 17 பவுன் தங்க நகைகளைத் திருடியதாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திண்டிவனம் வட்டம், சலவாதி, பொன்னியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ஜெயகிருஷ்ணன் (70). இவா், உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே இருந்து வந்தாா். இவருக்கு பிசியோதெரபி செய்வதற்காக திருநெல்வேலி மாவட்டம், பழவூரைச் சோ்ந்த பி.முத்துராமலிங்கம் (24) வீட்டில் பணியமா்த்தப்பட்டிருந்தாா். இந்த நிலையில், வீட்டில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 17 பவுன் தங்க நகைகளை கடந்த எப்ரல் 30-ஆம் தேதி மாயமானது. இதுகுறித்த புகாரின்பேரில் ரோஷணை போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா்.

இதில், முதியவருடயன் வீட்டில் இருந்து வந்த பி.முத்துராமலிங்கம் நகைகளைத் திருடியது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை திங்கள்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்த 10 பவுன் தங்க நகைகளையும் பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com