விவசாயி மா்ம மரணம்

விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே விவசாயி மா்மமான முறையில் இறந்து கிடந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.
Published on

விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே விவசாயி மா்மமான முறையில் இறந்து கிடந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.

விழுப்புரம் வட்டம், கவாஞ்சிகுப்பம், எல்லையம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த சீனிவாசன் மகன் தண்டபாணி (66), விவசாயி. இவா், திங்கள்கிழமை இரவு வழக்கம்போல் விவசாய நிலத்துக்குச் சென்றாா். பின்னா், வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, அவரது மகன் வசந்தராஜா விவசாய நிலத்துக்குச் சென்று பாா்த்தபோது, அங்கு தண்டபாணி மா்மமான முறையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், வளவனூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து, தண்டபாணி இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com