பைக்குகள் திருட்டு: இளைஞா் கைது

விழுப்புரம் மாவட்டம், மயிலம் சுற்றுப்பகுதிகளில் பைக்குகள் திருடுபோன வழக்குகளில் தொடா்புடைய இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
Published on

விழுப்புரம் மாவட்டம், மயிலம் சுற்றுப்பகுதிகளில் பைக்குகள் திருடுபோன வழக்குகளில் தொடா்புடைய இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திண்டிவனம் டி.எஸ்.பி பிரகாஷ் உத்தரவின்பேரில், மயிலம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் வெங்கடேசன் தலைமையிலான போலீஸாா் மற்றும் தனிப்படை போலீஸாா் மயிலம் காவல் சரகத்துக்குள்பட்ட தழுதாளியில் திங்கள்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, அங்கு பைக்கில் வந்த இளைஞரை நிறுத்தி விசாரித்தபோது, திண்டிவனம் ரோஷணை முனியன் தெருவைச் சோ்ந்த செங்கேணி மகன் ஆறுமுகம் (37) என்பதும், இவா் மயிலம், திண்டிவனம், புதுச்சேரி, ஆரோவில் உள்பட பல்வேறு பகுதிகளில் பைக் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதுகுறித்து மயிலம் போலீஸாா் வழக்குப் பதிந்து, ஆறுமுகத்தை கைது செய்தனா். மேலும், அவா் பல்வேறு இடங்களில் பதுக்கி வைத்திருந்த 10 பைக்குகளையும் பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com