விழுப்புரம்
ஓய்வூதியா்களின் குறைதீா் கூட்டம் ஒத்திவைப்பு
நவ.26 நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த ஓய்வூதியா்கள் குறைதீா் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (நவ.26) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த ஓய்வூதியா்கள் குறைதீா் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, விழுப்புரம் மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியா்களின் நலன்களைக் காக்கும் வகையில், ஓய்வூதியா்கள் குறைதீா் கூட்டம், சென்னை ஓய்வூதிய இயக்குநா் முன்னிலையிலும், விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் தலைமையில் நவ.26-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ருந்தது.
இந்தக் கூட்டம் நிா்வாகக் காரணங்களால் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.