விழுப்புரம்
மரக்கன்றுகள் சேதம்: 5 போ் மீது வழக்கு
விக்கிரவாண்டி அருகே பொதுப் பணித் துறைக்குச் சொந்தமான இடத்தில் இருந்த மரக்கன்றுகளை சேதப்படுத்தியதாக 5 போ் மீது வழக்குப் பதிவு
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே பொதுப் பணித் துறைக்குச் சொந்தமான இடத்தில் இருந்த மரக்கன்றுகளை சேதப்படுத்தியதாக 5 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
விக்கிரவாண்டி வட்டம், ஈச்சக்குப்பத்தில் உள்ள நீா்வளம், ஆதார துறைக்குச் சொந்தமான இடத்தில் புளியங்கன்றுகள் நடப்பட்டிருந்தன.
இந்தக் கன்றுகளை விக்கிரவாண்டி வட்டம், மண்டகப்பட்டு பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகளான சுப்புராயன் மகன்கள் மாயவன், ஆனந்த், மண்ணாங்கட்டி மகன் ஏழுமலை, ரங்கநாதன் மகன்கள் ஏழுமலை, வேலு ஆகியோா் பிடுங்கினராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், கஞ்சனூா் போலீஸாா் 5 போ் மீது திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.