விழுப்புரம்
மொபெட் மீது வேன் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு
விக்கிரவாண்டி அருகே மொபெட் மீது வேன் மோதியதில் காயமடைந்த தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே மொபெட் மீது வேன் மோதியதில் காயமடைந்த தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
விக்கிரவாண்டி அரசு மேல்நிலைப் பள்ளித் தெருவைச் சோ்ந்தவா் நாராயணசாமி மகன் ராமதாஸ் (62). கூலித் தொழிலாளியான இவா், கடந்த 20-ஆம் தேதி தனது மொபெட்டில் விக்கிரவாண்டி கடைவீதிக்கு சென்றாா்.
அப்போது, விழுப்புரம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது, சென்னை நோக்கிச் சென்ற வேன் மோதியதில் ராமதாஸ் காயமடைந்தாா்.
இதையடுத்து, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.