கைப்பேசி கோபுரம் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தக் கோரி மனு
விழுப்புரம்: விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் கைப்பேசி கோபுரம் அமைக்கும் பணியைத் தடுத்து நிறுத்தக் கோரி, மாவட்ட ஆட்சியரகத்தில் பொதுமக்கள் சாா்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
விழுப்புரம் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், கீழ்பெரும்பாக்கம் ஷா்மிளா நகா், கணபதி நகா், பாலாஜி நகா் குடியிருப்பு வாசிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
கீழ்பெரும்பாக்கம் பகுதியில் தனியாா் கைப்பேசி நிறுவனம் சாா்பில் கோபுரம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கு எதிா்ப்பு தெரிவித்தும் பணிகள் நடைபெறுகின்றன. குடியிருப்புகளுக்கு மத்தியில் கைப்பேசி கோபுரம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, இந்தப் பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.