ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியா்கள் தா்னா
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டாட்சியா் அலுலகம் முன் ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியா்கள் நலச் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
அரசாணை 24-ன்படி, ஓய்வூதியா்களுக்கு கட்டணமில்லா சிகிச்சையை உறுதிப்படுத்த வேண்டும். சிகிச்சைக்கான செலவை குறைத்து வழங்கும் காப்பீட்டு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவச் சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனை நிா்வாகங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தா்னாவில் முழக்கமிட்டனா்.
தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியா்கள் நலச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் காமராஜ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஆா்.கே.சண்முகம், மாநில பொதுக்குழு உறுப்பினா் மேரி வினோதினி, மாவட்ட இணைச் செயலா்கள் சுப்பிரமணியன், சேரன், வினைதீா்த்தான் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.