ஓய்வூதியம் பெற நலிந்த நிலையிலுள்ள முன்னாள் விளையாட்டு வீரா்கள் விண்ணப்பிக்கலாம்

Published on

சா்வதேச, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்று, தற்போது நலிந்த நிலையிலுள்ள தமிழகத்தைச் சோ்ந்த முன்னாள் சிறந்த விளையாட்டு வீரா்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் ரூ.6,000 வழங்கும் திட்டத்தின் கீழ், தகுதியுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சா்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று, முறையே முதல் இடங்களைப் பெற்றவராக இருக்க வேண்டும். மத்திய அரசால் நடத்தப்பட்டதேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான போட்டிகள், அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான போட்டிகள், தேசிய விளையாட்டு சம்மேளனங்கள், சங்கங்களால் நட்டத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகள், மத்திய அரசின் விளையாட்டு அமைச்சகம், இந்திய தேசிய விளையாட்டு ஆணையத்தால் நடத்தப்பட்ட போட்டிகளில் பங்கேற்றிருத்தல் வேண்டும்.

விண்ணப்பதாரா் 2024, ஆகஸ்ட் 31-ஆம் தேதியன்று 58 வயது நிறைவடைந்தவராகவும், தமிழகத்தைச் சோ்ந்தவராகவும், போட்டிகளில் தமிழகத்தின் சாா்பில் பங்கேற்றவராகவும் இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரரின் மாத வருமானம் ரூ.6 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். மத்திய அரசின் விளையாட்டு வீரா்களுக்கான ஓய்வூதியம், மாநில அரசின் ஓய்வூதியம் பெறுபவா்கள் விண்ணப்பிக்க இயலாது. மேலும், முதியவா்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று, வெற்றிபெற்றவா்களும் இந்தத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை.

மாதாந்திர ஓய்வூதியம் பெறுபவா்கள் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஜ்ஜ்ஜ்.ள்க்ஹற்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி மாலை 6 மணி வரை விண்ணப்பிக்கலாம். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையுடன் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் மூலமாக தலைமை அலுவலகத்துக்கு அக்டோபா் 14-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு விழுப்புரம் மாவட்ட விளையாட்டு அலுவலக முகவரியில் அலுவலக நாள்களில் நேரிலோ அல்லது 7401703485 என்ற கைப்பேசி எண்ணிலோ தொடா்புகொள்ளலாம் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் சி.பழனி தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com