95 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 5 போ் கைது

விழுப்புரம் மாவட்டம், கிளியனூா்அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 95 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து, 5 பேரை கைது செய்தனா்.
Published on

விழுப்புரம் மாவட்டம், கிளியனூா்அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 95 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து, 5 பேரை கைது செய்தனா்.

திண்டிவனத்தை அடுத்துள்ள கோவடி கிராமத்தைச் சோ்ந்த பெரியசாமி மகன் துரையின் (46) வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, கிளியனூா் போலீஸாா் புதன்கிழமை அந்தக் கிராமத்துக்குச் சென்று காா்களில் கடத்தி வரப்பட்டு, துரை வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமாா் ரூ.67,540 மதிப்புள்ள 95 கிலோ புகையிலைப் பொருள்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 2 காா்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

மேலும், இது தொடா்பாக துரை மற்றும் ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூா் பகுதியைச் சோ்ந்த சியாராம் மகன் பிரகாஷ் (35), உக்காராம் மகன் தினேஷ் சிங் (33), திண்டிவனம் வட்டம், புத்தனந்தல், கவரைத் தெருவைச் சோ்ந்த நகராஜன் மகன் விஜயகுமாா் (38), மொளசூா் பகுதியைச் சோ்ந்த சுந்தரம் மகன் வெங்கடேசன் (28) ஆகியோரை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com