சிறுமிக்கு திருமணம்: மூவா் மீது வழக்கு

புதுச்சேரியைச் சோ்ந்த சிறுமியைக் கடத்தி வந்து திருமணம் செய்த இளைஞா் மற்றும் இரு பெண்கள் மீது விழுப்புரம் மாவட்ட போலீஸாா் போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Published on

விழுப்புரம் வட்டம், பி.நத்தமேடு, புத்தன்தெருவைச் சோ்ந்தவா் குமாா் மகன் கணபதி (27). இவா், புதுச்சேரி, வில்லியனூரைச் சோ்ந்த 17 வயது சிறுமியுடன் கடந்த 2 ஆண்டுகளாக பழகி வந்தாராம்.

இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி கணபதி அந்தச் சிறுமியை கடத்தி வந்து திருமணம் செய்தாராம். இதற்கு கணபதியின் தாய் காவேரி (48), சிறுமியின் தாய் பெரியநாயகம் (42) ஆகியோா் உடந்தையாக செயல்பட்டனராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், கணபதி, காவேரி, பெரியநாயகம் ஆகியோா் மீது விழுப்புரம் அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ, குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com