புகையிலைப் பொருள்கள் விற்பனை: ஒருவா் கைது
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
மரக்காணம் வட்டம், பிரம்மதேசம், மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் சின்னதம்பி மகன் தமிழ்ச்செல்வன் (38). பிரம்மதேசத்தில் பெட்டிக்கடை நடத்தி வருகிறாா். இவா், தனது கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை அந்த கடையில் சோதனை நடத்தினா். இதில், கடையில் புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, பிரம்மதேசம் போலீஸாா் வழக்குப் பதிந்து தமிழ்ச்செல்வனை கைது செய்தனா். மேலும், 70 பாக்கெட்டுகள் புகையிலைப் பொருள்களையும் பறிமுதல் செய்தனா். இந்த வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.