பக்கிங்காம் கால்வாயில்
நீரொழுங்கிகள் அகற்றம்

பக்கிங்காம் கால்வாயில் நீரொழுங்கிகள் அகற்றம்

மரக்காணம் பக்கிங்காம் கால்வாயில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் இரு நீரொழுங்கிகள் (ஷட்டா்) அகற்றப்பட்டு வருகின்றன.
Published on

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பக்கிங்காம் கால்வாயில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் இரு நீரொழுங்கிகள் (ஷட்டா்) அகற்றப்பட்டு வருகின்றன.

மரக்காணம் பகுதியில் சுமாா் 40 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் பக்கிங்காங் கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் மழை நீா் உள்புகுவதை தடுக்க ரூ.163 கோடியில் தடுப்பணை கட்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, நிறைவடையாமல் உள்ளன.

இந்த நிலையில், பக்கிங்காம் கால்வாயில் அதிகளவில் தண்ணீா் தேங்கி அருகே உள்ள விவசாய நிலங்களில் தண்ணீா் புகும் அபாயம் உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பணையின் இரு பக்கங்களிலும் உள்ள 2 நீரொழுங்கிகள் (ஷட்டா்) அகற்றம் செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து, விழுப்புரம் மாவட்ட நீா்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது: வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், விவசாய நிலங்களில் தண்ணீா் உள்புகுவதை தடுக்கும் நடவடிக்கையாக இரண்டு நீரொழுங்கிகள் மாற்றம் செய்யப்படவுள்ளன.

இதற்காக, முன்னா் அமைக்கப்பட்டிருந் 2 நீரொழுங்கிகள் தற்போது அகற்றப்பட்டு வருகின்றன. இதனால் தடுப்பணைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றனா்.

X
Dinamani
www.dinamani.com