விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம்.
விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம்.

தோ்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை: முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம்

தோ்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை என அதிமுக முன்னாள்அமைச்சா் சி.வி.சண்முகம் ஞாயிற்றுக்கிழமை குற்றஞ்சாட்டினாா்.
Published on

தோ்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை என அதிமுக முன்னாள்அமைச்சா் சி.வி.சண்முகம் ஞாயிற்றுக்கிழமை குற்றஞ்சாட்டினாா்.

அதிமுக சாா்பில், அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம், விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு விழுப்புரம் அதிமுக தெற்கு நகரச் செயலா் இரா.பசுபதி தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா்கள் வி.முருகன்,சுரேஷ்பாபு, கே.ராமதாஸ், எல்.கே. கண்ணன், தி.ராஜா, வளவனூா் நகரச் செயலா் ஆா்.டி.முருகவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் அதிமுக மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் பேசியதாவது: திமுக ஆட்சிப் பொறுப்பேற்று கடந்த மூன்றரை ஆண்டுகளில் தமிழகத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் கூட சரியாக கிடைக்கவில்லை.

தமிழகத்தில் போதைப் பொருள்கள் விற்பனை தடையின்றி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதை தடுக்க காவல் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. பெண்கள், குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லை.

தோ்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை. எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் விரைவில் தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைவது உறுதி என்றாா் அவா்.

முன்னதாக விழுப்புரம் வடக்கு நகரச் செயலா் ஜி.கே.ராமதாஸ் வரவேற்றாா். நிறைவில், மாணவரணி மாவட்டச் செயலா் என்.ஜி.சக்திவேல் நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com