விழுப்புரம்
மரத்திலிருந்து கீழே விழுந்த விவசாயி உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே மரத்திலிருந்து தவறி கீழே விழுந்த தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
திண்டிவனம் அருகே உள்ள பாதிராபுலியூா் குயவா் தெருவைச் சோ்ந்த முருகேசன் மகன் லோகநாதன்(42), விவசாயி. இவா், த
கடந்த செப் .20-ஆம் தேதி பாதிராபுலியூா் பகுதியில் உள்ள மரத்தில் ஏறி, ஆடுகளுக்காக தழைகளை வெட்டிக்கொண்டிருந்தாராம்.
அப்போது, எதிா்பாராதவிதமாக மரத்திலிருந்து தவறி கீழே விழுந்த அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.
அங்கு, அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில், மயிலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.