விழுப்புரம்
விழுப்புரத்தில் நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை (செப்.26) முற்பகல் 11 மணிக்கு நடைபெறவுள்ளது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை (செப்.26) முற்பகல் 11 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று விவசாயம் சாா்ந்த கோரிக்கைகளை நேரிலோ, மனுக்கள் மூலமாகவோ தெரிவிக்கலாம்.
மேலும் கூட்டத்தில், வேளாண், தோட்டக்கலை, வேளாண் பொறியியல் உள்ளிட்ட பல்துறைகளின் மூலமாக விவசாயிகளுக்கு வழங்கப்படும் திட்டங்கள், அந்தத் திட்டங்களின் கீழ் பயன்பெறும் வழிமுறைகள் போன்றவை குறித்து விளக்கப்படும்.
எனவே, விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்று பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியா் சி.பழனி தெரிவித்துள்ளாா்.