விழுப்புரம்
விழுப்புரம்: 24 தனிப்பிரிவு காவலா்கள் பணியிட மாற்றம்
விழுப்புரம் மாவட்டத்தில் தொடா்ந்து 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே காவல் நிலைய பகுதியில் பணியாற்றி வந்த தனிப்பிரிவுக் காவலா்கள் 24 போ் வெள்ளிக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
விழுப்புரம் நகரம், மேற்கு, தாலுகா, வளவனூா், காணை, கெடாா், கண்டமங்கலம், அரகண்டநல்லூா், திண்டிவனம், மயிலம், அவலூா்பேட்டை, செஞ்சி, வானூா், ஆரோவில், கோட்டக்குப்பம், மரக்காணம், வளத்தி உள்ளிட்ட காவல் நிலையங்களில் தலைமைக் காவலா்கள், சிறப்பு உதவி ஆய்வாளா் நிலைகளில் 24 தனிப்பிரிவில் காவலா்கள் தொடா்ந்து 3 ஆண்டுகளாக பணியாற்றி வந்தனா்.
இந்த நிலையில், 24 பேரையும் வெவ்வேறு காவல் நிலையங்களுக்கு தனிப்பிரிவுக் காவலா்களாக பணியிட மாற்றம் செய்து மாவட்ட எஸ்.பி. தீபக் சிவாச் வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தாா்.