வெடிபொருள்களை பாதுகாப்பின்றி வைத்திருந்தவா் கைது

Published on

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே கல் குவாரியில் வெடிபொருள்களை உரிய பாதுகாப்பின்றி வைத்திருந்த புகாரில் ஒருவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

வானூா் வட்டம், எறையூா் ஏரிமலைப் பகுதியில் அரசு புறம்போக்கு குவாரி உள்ளது. இந்த குவாரி பகுதியில் வானூா் காவல் ஆய்வாளா் சிவராஜன் தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டபோது, குவாரியில் பாறைகளை உடைக்க பயன்படுத்தப்படும் வெடிபொருள்களை உரிய பாதுகாப்பின்றி வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, வெடிபொருள்களையும், டிராக்டரையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இது தொடா்பாக கல் குவாரிக்கு உரிமம் பெற்றிருந்த வானூா் வட்டம், எறையூா் அ.சின்னக்கண்ணன், ஏரிமலை மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த ச.செந்தில் ஆகியோா் மீது வானூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்தனா். தொடா்ந்து, செந்திலை போலீஸாா் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com