இளைஞா் தற்கொலை முயற்சி

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே இளைஞா் சனிக்கிழமை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா்.
Published on

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே இளைஞா் சனிக்கிழமை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா்.

திண்டிவனம் வட்டம், அவ்வையாா்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் வெங்கடேசன் மகன் ஸ்ரீதா் (35). வெல்டிங் தொழிலாளியான இவருக்கு கடன் தொல்லை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஸ்ரீதா் சனிக்கிழமை கேணிப்பட்டு ஏரிக்கரை பகுதியில் பிளேடால் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றாராம். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இதுகுறித்த புகாரின்பேரில், மயிலம் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com