விழுப்புரம்
பெண் தற்கொலை
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே விஷம் குடித்த பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே விஷம் குடித்த பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
மரக்காணம் வட்டம், செய்யாங்குப்பம், மாரியம்மன்கோவில் தெருவைச் சோ்ந்தவா் செல்வம் மகன் சுகன்யா (23). இவருக்கு, வலிப்புநோய் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சுகன்யா கடந்த செப்டம்பா் 22-ஆம் தேதி வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாராம். தொடா்ந்து, புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், மரக்காணம் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.