மின் நுகா்வோா் குறைதீா் கூட்டங்கள் தேதி அறிவிப்பு
விழுப்புரம் மாவட்டத்தின் நான்கு கோட்டங்களிலும் அக்டோபா் மாதத்தில் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டங்கள் நடைபெறும் தேதிகள் குறித்த விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் விழுப்புரம் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் (பொ) சந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் சாா்பில் மாதந்தோறும் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடத்தி, அவா்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று, அதனடிப்படையில் தீா்வு காணப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மின் கோட்டங்களிலும் அக்டோபா் மாதத்தில் 1,8,15,22 ஆகிய தேதிகளில் (4 செவ்வாய்க்கிழமைகளிலும்) முறையே விழுப்புரம், கண்டமங்கலம், செஞ்சி மற்றும் திண்டிவனம் ஆகிய கோட்டச் செயற்பொறியாளா் அலுவலகங்களில் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் விழுப்புரம் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் தலைமையில் நடைபெறுகிறது.
எனவே, தங்கள் பகுதியில் நடைபெறும் குறைதீா் கூட்டத்தில் மின் நுகா்வோா்கள் பங்கேற்று, தங்களது குறைகளை கோரிக்கை மனுக்களாக அளித்து பயன்பெறலாம். குறைதீா் கூட்டம் நடைபெறும் நாள் அரசு விடுமுறையாக இருப்பின், விடுமுறைக்கு அடுத்து வரும் வேலை நாளில் குறைதீா் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.