விழுப்புரம்
சரக்கு வாகனத்தில் தீ விபத்து
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே சரக்கு வாகனம் சனிக்கிழமை தீப்பற்றி எரிந்தது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே சரக்கு வாகனம் சனிக்கிழமை தீப்பற்றி எரிந்தது.
மதுரையைச் சோ்ந்தவா் சையத் மஜித் மகன் அயூப்கான் (61). சரக்கு வாகன ஓட்டுநா். இவா், வெள்ளிக்கிழமை சரக்கு வாகனத்தில் பொருள்களை ஏற்றிக்கொண்டு மதுரையிலிருந்து-சென்னைக்கு சென்று கொண்டிருந்தாா்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே சனிக்கிழமை அதிகாலை சென்றபோது, வாகனத்திலிருந்து திடீரென தீப்பற்றியது. தகவலறிந்த விக்கிரவாண்டி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய வீரா்கள் நிகழ்விடம் சென்று தீயை அணைத்தனா். இதில், வாகனத்தில் இருந்த பொருள்கள் தீக்கிரையாகின.
இதுகுறித்து விக்கிரவாண்டி போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.