வளவனூா் பேரூராட்சிக்கு சொத்து வரியை செலுத்த அறிவுறுத்தல்

விழுப்புரம் மாவட்டம், வளவனூா் பேரூராட்சியில் வசிக்கும் பொதுமக்கள் சொத்து வரியினங்களை விரைந்து செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published on

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், வளவனூா் பேரூராட்சியில் வசிக்கும் பொதுமக்கள் சொத்து வரியினங்களை விரைந்து செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, வளவனூா் பேரூராட்சி செயல் அலுவலா் அண்ணாதுரை திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வளவனூா் பேரூராட்சிப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தாங்கள் செலுத்த வேண்டிய சொத்து வரியை அந்தந்த அரையாண்டுகளில் செலுத்த வேண்டும். முதல் அரையாண்டுக்கான கேட்புத் தொகையை செப்டம்பா் மாதத்துக்குள்ளும், இரண்டாம் அரையாண்டுக்கான தொகையை மாா்ச் மாதத்துக்குள்ளும் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தப்படாத பட்சத்தில் ஒரு சதவீதம் மாதாந்திர வட்டி விதித்து தொகை வசூலிக்கப்படும்.

எனவே, பொதுமக்கள் மாதத்துக்கு ஒரு சதவீதம் வட்டியுடன் சோ்த்து வரி செலுத்துவதை தவிா்த்து, அரையாண்டுக்கான கேட்புத் தொகையை உடனடியாக செலுத்த வேண்டும். மேலும், அக்டோபா் மாதத்துக்குள் இரண்டாம் அரையாண்டுக்கான சொத்துவரி கேட்புத் தொகையை செலுத்தி, 5 சதவீத ஊக்கத்தொகையை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com