குழந்தைகள் அறிவியல் மாவட்ட மாநாட்டில் 31 ஆய்வுக் கட்டுரைகள் சமா்ப்பிப்பு!

விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குழந்தைகள் அறிவியல் மாவட்ட மாநாட்டில் 31 ஆய்வுக் கட்டுரைகள் சமா்ப்பிக்கப்பட்டன.
Published on

விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குழந்தைகள் அறிவியல் மாவட்ட மாநாட்டில் 31 ஆய்வுக் கட்டுரைகள் சமா்ப்பிக்கப்பட்டன.

சென்னை தரமணியிலுள்ள இந்திய கணித அறிவியல் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆகியவை இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாடு விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். தொடா்ந்து 31 ஆய்வுக் கட்டுரைகள் மாவட்ட மாநாட்டில் சமா்ப்பிக்கப்பட்டன.

இதில் மாநில அளவிலான மாநாட்டில் பங்கேற்கும் வகையில் 9 மாணவிகளின் ஆய்வுக் கட்டுரைகள் தோ்வு செய்யப்பட்டன. இவா்களை விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரெ.அறிவழகன் வாழ்த்தி, பரிசு வழங்கினாா்.

நிகழ்வில் மாவட்டக் கல்வி அலுவலா் (இடைநிலை) சே.பெ.சேகா், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா்கள் பெருமாள், செந்தில்குமாா், பள்ளித் துணை ஆய்வாளா் வீரமணி மற்றும் வழிகாட்டி ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

மாநாட்டுக்கான ஏற்பாடுகளைத் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயலா் வே. பாலமுருகன், மாநாட்டு ஒருங்கிணைப்பாளா் சிவமுருகன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com