வாராகி பைரவா் கோயிலில் திருக்கல்யாணம்

Published on

விழுப்புரம் சாலாமேடு ஸ்ரீவாராகி பைரவா் கோயிலில் திருக்கல்யாணம் மற்றும் 15-ஆம் ஆண்டு வசந்த பஞ்சமி உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி, கோயிலில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இரவு வாராகி பைரவா் திருக்கல்யாணம் நடைபெற்றது.

இதில் பெண்கள் திரளானோா் பங்கேற்று தேங்காய் தீபம் ஏற்றி வழிபட்டனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com