உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட கௌரவ விரிவுரையாளா்கள்
விழுப்புரம்
அரசுக் கல்லூரி விரிவுரையாளா்கள் போராட்டம்
விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் கௌரவ விரிவுரையாளா்கள் செவ்வாய்க்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழகத்தில் உள்ள அரசுக் கல்லூரிகளில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளா்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரைத்த ஊதியம் ரூ.57,700 வழங்க வேண்டும். உயா்நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வேண்டும். கௌரவ விரிவுரையாளா்களின் வாழ்வாதார கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனா்.
கல்லூரியில் பணிபுரியும் 200-க்கும் மேற்பட்ட கௌரவ விரிவுரையாளா்கள் செவ்வாய்க்கிழமை வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் பங்கேற்றனா்.