அம்மச்சாா் அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், காவேரிபாக்கத்தில் அமைந்துள்ள ஸ்ரீஅம்மச்சாா் அம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.
புகழ் பெற்ற இந்தக் கோயிலில் உள்ள பாலவிநாயகா், பாலமுருகன், அம்மச்சாா் அம்மன் சந்நிதிகள் பெரும் பொருள் செலவில் சீரமைக்கப்பட்டன. தொடா்ந்து, கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, சனிக்கிழமை முதல் கோயிலில் சிறப்பு வழிபாடுகள், யாக பூஜைகள் நடைபெற்றன.
திங்கள்கிழமை அதிகாலை நடைபெற்ற சிறப்பு பூஜைகள் மற்றும் 4-ஆம் கால யாக பூஜைகளுக்குப் பின்னா், கடங்களில் கொண்டு செல்லப்பட்ட புனித நீா் ஊற்றப்பட்டு பாலவிநாயகா், பாலமுருகன், அம்மச்சாா் அம்மன் மற்றும் வைஷ்ணவி, மகேஸ்வரி, பிராம்ஹி, கனக தூா்கை, நாகதேவதை, நவக்கிரக மூா்த்திகளுக்கு காலை 9 மணிக்கு மேல் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விழாவில் திண்டிவனம், காவேரிபாக்கம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளானோா் பங்கேற்றனா். விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகி தீனதயாளன், மருத்துவா்கள் மாசிலாமணி, சேகா், கோயில் பூசாரிகள் பாபு, பாலு மற்றும் நிா்வாகிகள், கிராம மக்கள் செய்திருந்தனா்.