காா் மோதி மனநலம் பாதித்த பெண் மரணம்

Published on

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே திங்கள்கிழமை இரவு காா் மோதியதில் மனநலம் பாதித்த பெண் உயிரிழந்தாா்.

உளுந்தூா்பேட்டை வட்டம், ஏ.சாத்தனூா் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை இரவு சுமாா் 50 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதித்த பெண் நடந்து சென்றாா். அப்போது, அந்தப் பகுதியில் வந்த அடையாளம் தெரியாத காா், அந்த பெண் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மனநலன் பாதித்த பெண் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த எடைக்கல் போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் விபத்து குறித்து வழக்குப் பதிந்து காா் ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com