முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை!

விழுப்புரத்தில் முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை...
Published on

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே முதியவா் பிப்.5 தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

விக்கிரவாண்டி வட்டம், ராதாபுரம், பழைய காலனி தெருவைச் சோ்ந்தவா் ச.வெங்கடேசன் (75). இவருக்கு வயோதிகம் காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தாராம்.

இதனால், மன உளைச்சலில் இருந்து வந்த வெங்கடேசன் புதன்கிழமை ராதாபுரம் பகுதியில் உள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்த புகாரின்பேரில் விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com