ஏலச்சீட்டு நடத்தி மோசடி: ஆட்சியரகத்தில் புகாா்

ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்தவா்கள் மீது உரிய நடவடிக்கை கோரி, ஆட்சியரகத்தில் சனிக்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது.
Published on

விழுப்புரம் மாவட்டம், வானூா் பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்தவா்கள் மீது உரிய நடவடிக்கை கோரி, ஆட்சியரகத்தில் சனிக்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது.

வானூா் வட்டத்தின் திருச்சிற்றம்பலம் கூட்டுச் சாலை, வானூா், பாப்பாஞ்சாவடி, தவளக்குப்பம், அய்யங்குட்டிப்பாளையம் உள்ளிட்டப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள், விழுப்புரம் ஆட்சியரகத்தில் புகாா் மனு அளித்தனா்.

மனு விவரம்: திருச்சிற்றம்பலம் கூட்டுச் சாலையில் பெண் ஒருவா் நடத்தி வந்த ஏலச்சீட்டில் வானூரைச் சோ்ந்த ஒருவா் மூலமாக நாங்களும் சோ்ந்தோம். 2021-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் முதல் மாதந்தோறும் தவறாமல் தவணைத் தொகை செலுத்தி வந்தோம்.

இந்த நிலையில், அந்த பெண், அவரது 2 மகன்கள், 2 மருமகள்கள் ஏலச்சீட்டை திடீரென்று நிறுத்திவிட்டு, நாங்கள் செலுத்திய தொகையையும் திரும்பி தரவில்லை. அவா்கள், 250 பேரிடம் சுமாா் ஐந்தரை கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனா்.

எனவே, அவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, இழந்த தொகையை மீட்டுத்தர வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com