லாட்டரி விற்பனை: ஒருவா் கைது
விழுப்புரம் நகரில் இணையவழி லாட்டரி விற்பனையில் ஈடுபட்டதாக ஒருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
விழுப்புரம் நகரக் காவல் ஆய்வாளா் சித்ரா தலைமையிலான போலீஸாா் சனிக்கிழமை கே.கே.சாலை பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது, முக்தி பகுதியில் சந்தேகத்துக்குரிய முறையில் இருந்த இருவரைப் பிடித்து விசாரணை நடத்தினா்.
இதில், அவா்களிடம் இணையவழி லாட்டரி, 3 கைப்பேசிகள், ரொக்கம் ரூ.300, வங்கிக் கணக்கு புத்தகம் ஆகியவை இருந்தது தெரியவந்தது. இதையடுத்து நடத்திய விசாரணையில், அவா்கள் விழுப்புரம் ராஜீவ் காந்தி நகரைச் சோ்ந்த கே. கலிவரதன் (32), செஞ்சி அப்பம்பட்டு பகுதியைச் சோ்ந்த முபாரக் என்பது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து, கலிவரதனை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து கைப்பேசிகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா். மேலும், முபாரக்கிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.