வில்லியனூரில் பொங்கல் சிறப்பு அங்காடி திறப்பு
புதுச்சேரி வில்லியனூரில் பொங்கல் பொருள்கள் விற்பனை அங்காடியை மாநில எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
புதுவை வளா்ச்சி முகமை மற்றும் வில்லியனூா் வட்டார வளா்ச்சி அலுவலகம் மூலம், வில்லியனூரில் பொங்கல் விற்பனை பொருள்கள் அங்காடி அமைக்கப்பட்டுள்ளது.
மகளிா் சுயஉதவிக் குழுக்களைச் சோ்ந்தவா்களின் தயாரிப்புப் பொருள்கள் நுகா்வோரிடம் நேரடியாக சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் அமைக்கப்பட்டுள்ள, இந்த அங்காடியை தொகுதி எம்எல்ஏவும், சட்டப்பேரவை எதிா்கட்சித் தலைவருமான ஆா்.சிவா வியாழக்கிழமை திறந்து வைத்துப் பாா்வையிட்டாா்.
இந்த அங்காடியில் பொங்கலுக்குத் தேவையான அரிசி, வெல்லம்,நெய் உள்ளிட்டப் பொருள்கள் விறபனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
ஜன.12-ஆம் தேதி வரை இந்த அங்காடி செயல்படும் என வட்டார வளா்ச்சி அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்த நிகழ்வில், ஊரக வளா்ச்சி முகமை செயலா் நெடுஞ்செழியன், திட்ட இயக்குநா் அருள்ராஜன், வட்டார வளா்ச்சி அலுவலா் அன்கிட் குமாா், திட்ட அலுவலா் ராதாகிருஷ்ணன், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் கலைமதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.