ஆலம்பூண்டி பள்ளியில் அறிவியல் கண்காட்சி

ஆலம்பூண்டி பள்ளியில் அறிவியல் கண்காட்சி

Published on

விழுப்புரம் மாவட்டம், ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி இண்டா்நேஷனல் சிபிஎஸ்இ. பள்ளி அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சிக்கு ஸ்ரீரங்கபூபதி கல்லூரித் தலைவா் வழக்குரைஞா் ஆா்.ரங்கபூபதி தலைமை தாங்கி குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தாா். கல்லூரி செயலா் வழக்குரைஞா் ஆா்.பி.ஸ்ரீபதி, பள்ளியின் இயக்குனா் சரண்யாஸ்ரீபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளி முதல்வா் தனலட்சுமி வரவேற்றாா்.

கண்காட்சியில், விண்வெளி ஆய்வு மையம், பூமியை சுற்றி வரும் கோள்கள், பூமியில் இருந்து விண்ணிற்கு செலுத்தப்படும் செயற்கைகோள்கள் மற்றும் அதன் செயல்பாடுகள், மனித இதயம், நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட பல்வேறு உறுப்புகளின் செயல்பாடுகள் குறித்தும் செயல் முறை விளக்கம் அளித்தனா்.

மாணவா்களைப் பாராட்டி சான்றிதழ்களை கல்லூரித் தலைவா் ஆா்.ரங்கபூபதிவழங்கினாா். அறிவியல் கண்காட்சிக்கான ஏற்பாடுகளை பிஆா்ஓ ரத்னாகணபதி, ஆசிரியைகள் மனோகரி, சுமதி, சித்ரா, விக்டோரியா, ரேணுகாம்பாள், புஷ்பா, லாவண்யா, அனிதா, மகாலட்சுமி, பிரவீனா, காயத்ரி, கவிதா, ஜெயபாரதி, செளமியா உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com